உத்திரகோசமங்கை ஆருத்ரா தரிசனம்
உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின்* ,
மாநில மற்றும் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அடியார்கள் * திருவடிகளை மனம், மெய் மொழிகளால் வணங்கி மகிழ்கின்றோம் 🙏🌻🌺🌻🌺🌻🌺 *
உத்திரகோசமங்கை அருள்தரும் மங்களாம்பிகை உடனுடைய அருள்மிகு மங்கள நாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ. மாணிக்க வாசகர் திருநாளும் ஆருத்ரா தரிசனம் 1433ம் பசலி 18.12.2023 முதல் 27.12.2023 வரை *
Uthirakosamangai Arulmigu Mangaleswari Mangalanathaswamy Temple Sri Manikkavacakar Thirunal and Arudra Darshan 2023*
மார்கழி மாதம் 10 ஆம் நாள் 26.12.2023 செவ்வாய் கிழமை காலை 8 :00மணிக்கு மேல் மூலஸ்தானம் அருள்மிகு மரகத நடராஜபெருமானுக்கு சந்தனம் படி களைதல் ..
காலை 8:30 மணிக்கு மேல் மூலவர் அருள்தரும் மங்களாம்பிகை உடனுடைய அருள்மிகு மங்களநாதர் சிவாலயத்தில் மரகத நடராஜபெருமானுக்கு மகா அபிஷேகம் ஆரம்பம்..
*
26.12.2023* செவ்வாய் கிழமை காலை 9:00 மணி முதல் தேவார இன்னிசை, பண்ணிசை பேரறிஞர் திருமுறை கலாநிதி கரூர் குமார சாமிநாத தேசிகர் குழுவினரின் திருமுறை பாராயணம் நடைபெறும்.
26.12.2023 செவ்வாய் கிழமை இரவு 10:00மணிக்கு மேல் அருள்மிகு கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபம் எழுந்தருளல்.
இரவு 11 மணிக்கு மேல் மூலவர் அருள்மிகு மரகத நடராஜபெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் ஆரம்பம்
மார்கழி மாதம் 11 ஆம் நாள் 27.12.2023 புதன்கிழமை அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனமும் சோடச உபசார அலங்கார தீபாராதனையும் நடைபெறும்.
காலை 10:00 மணிக்கு மேல் அருள்மிகு கூத்தபெருமான் திருவீதியுலா ..
மாலை 5:00 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகளுக்கு அபிஷேகம் ..
இரவு 8:00 மணிக்கு மேல் ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து சிறப்பு நாதஸ்வரத்தோடு பஞ்சமூர்த்தி புறப்பாடு வெள்ளி ரிஷபசேவை.
சுவாமி பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம்.
Lord’s teachings to Goddess Parvati about sacred scripture.
என்றும் சிவப்பணியில் உலகசிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை *பதிவு எண். 2/ 2021 தலைமையகம் சென்னை 1 .
Website (இணையதளம் ): https://www.ulagasivanadiyargal.org
Leave a Reply