சிவத்தொண்டுகள் செந்தலையில் அருள் பாலிக்கும் . அருள்தரும் மீனாட்சி அம்மை உடனாய அருள்மிகு சுந்தரேசுவரர் by shiva shiva Dec 29, 2023 0 Comment நமச்சிவாய வாழ்க!ஆரூரா நடராஜா!உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின்மாநில, மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள் மற்றும் அடியார்கள் திருவடிகளை மனம், மெய் மொழிகளால் வணங்கி மகிழ்கின்றோம் 🙏உலக சிவனடியார் திருக்கூட்டம் சார்பாக தஞ்சாவூர் மாவட்டம் செந்தலையில் அருள் பாலிக்கும் . அருள்தரும் மீனாட்சி அம்மை உடனாய அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயிலில் * 27.12.2023 அன்று அருள்தரும் மீனாட்சி அம்மை உடனாய அருள்மிகு சுந்தரேசுவரர் சுவாமிகள் திருவருள் கருணையினால் காலை 07.30 மணிக்கு அடியார் பெருமக்கள் சூழ பன்னிரு திருமுறை பாராயணம் செய்துகொண்டு கயிலாய வாத்தியம் முழங்க அருள்தரும்சிவகாமசுந்தரி உடனாய அருள்மிகு நடராசர் பெருமான் நான்கு மாட வீதிகளில் திருவீதி உலா தஞ்சாவூர் மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்பாளர்கள், அடியார் பெருமக்கள் ,* செந்தலை ஊர் பொதுமக்கள் மற்றும் நல் உள்ளங்களின் வேண்டுதலாலும் அனைவரின் உழைப்பாலும் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. *அடியார் பெருமக்கள், பக்த்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு திருஅமுது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மேலும் சைவ பெருவிழா சிறப்பாக நடைபெற்றிட அனைவரிடத்திலும் தொடர்ந்து உத்வேகத்துடன் இருந்திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர்சிவ சிங்கார வேலன் ஐயா தஞ்சாவூர் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சிவ சுந்தரபாண்டியன் ஐயா, *புதுக்கோட்டை மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் சிவ திருப்பதி ஐயா மற்றும் தஞ்சாவூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சிவ ஜீவா அம்மாஅவர்களின் பொன்னார் திருவடிகளை வணங்குகின்றோம்.மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.என்றும் சிவப்பணியில் உலகசிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை *பதிவு எண். 2/ 2021 தலைமையகம் சென்னை 1 .Website (இணையதளம் ): https://www.ulagasivanadiyargal.org
Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment Name* Email* Save my name, email, and website in this browser for the next time I comment. Please enter an answer in digits:8 + 3 = Δ
Leave a Reply