பாதுகாப்பு விழிப்புணர்வு
நமச்சிவாய வாழ்க !
ஆரூரா நடராஜா !
🙏 உலக சிவனடியார்கள் திருக்கூட்டத்தின்* , மாநில மற்றும்
மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் , பொறுப்பாளர்கள் , அடியார்களின் திருவடியை மனம், மெய் மொழிகளால் வணங்கி மகிழ்கின்றோம் 🙏*
அண்மைக் காலங்களில் *அடியார்களுக்கு ஏற்படும் இருசக்கர வாகனங்களில் ஏற்படும் விபத்துகள் 😰😰 அளவற்றவை அதற்கான காரணம் பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததே . அதற்கான தீர்வுகள் இங்கே!
1 . தலைக்கவசம் சரியாக அணிந்த பின்பு தான் இருசக்கர வாகனத்தை தொடவேண்டும்.எக்காரணத்தைக்கொண்டும் இடையே தலைக்கவசத்தை அவிழ்க்க கூடாது .( தலையை தவிர உடலில் எந்த பகுதியில் அடிபட்டாலும் மருத்துவ சிகிச்சையை மேற்க்கொண்டு சரி செய்யலாம் அல்லது மாற்று உறுப்பு ஏற்பாடுகள் செய்யலாம்)
2 . எப்போதுமே அதிக வேகத்தில் பயணம் செல்ல வேண்டாம்.
3 . இரு சக்கர வாகனத்தில் இரண்டு பிரேக்குகளையும் சரியாகப் பயன்படுத்துவது அவசியம். நீங்கள் மிகக் குறைந்த தூரத்தில் நிறுத்த வேண்டியிருந்தால், முன் பிரேக்கில் நான்கு விரல்களால் சமநிலையை பராமரித்து பிரேக் போடவும்.
4 . . இரு நபர்கள் மட்டுமே எப்போதும் செல்ல வேண்டும்.
5 . 21 வயதுக்குப்பிறகே பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்க வேண்டும்.
6 . பிள்ளைகளுக்கு விபத்து பற்றிய விழிப்புணர்வை அடிக்கடி கொடுத்து அவர்களின் மனதில் பதிய வைக்கவேண்டும்.
7 . இரு சக்கர வாகனம் ஓட்டும் போதெல்லாம், ஹெட்லைட் பீமை ** சரியாக பயன்படுத்த வேண்டியது மிகவும் அவசியமாகும். நெடுஞ்சாலையில் ஹை பீம் பயன்படுத்த வேண்டும்.
8 . நீங்கள் நகரத்திற்குள் சென்றாலோ அல்லது முந்திச் செல்வதாக ( ஓவர்டேக் ) இருந்தாலோ, லோ பீம் மட்டும் பயன்படுத்தவும்.
9 . எப்போதும் நல்ல, தரமான ஹெல்மெட் அணியுங்கள்* .
10 . பொருத்தமான பாதுகாப்பு கியர் அணியுங்கள்* .
(தகுந்த கியர் மற்றும் தோல் ஜாக்கெட்டுகள், எல்போ கார்டுகள், வழுக்காத பாதங்கள் கொண்ட பூட்ஸ் மற்றும் விபத்துகளின் போது காயங்கள் ஏற்படக்கூடிய உடலின் பகுதிகளை மறைக்க கையுறைகள் போன்றவற்றை போதுமான அளவு அணிய வேண்டும்).
11 .போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும் .
. இரவில் மற்ற வாகனங்களுக்கு பைக்கின் ஹெட்லைட்கள் அல்லது குறிகாட்டிகளை இயக்கவும்.
12 . .நீங்கள் சவாரி செய்வதற்கு முன் உங்கள் *பைக் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.( கிளட்ச் , பிரேக்குகள் , காற்றழுத்தம், ஹெட் மற்றும் டெயில் லைட்டுகள், இன்ஜின் போன்றவை)
13 . சாலையில் செல்லும் எந்த வாகனத்தையும் தவறான வழியில் முந்திச் செல்லாதீர்கள் . ஒரு திருப்பத்திலோ அல்லது கடக்கும்போதும் முந்திச் செல்ல வேண்டாம்.
14 . விபத்து காப்பீடு மிகவும் அவசியம்..சாலையில் கண்ணுக்குத் தெரியாத ஆபத்துகள் குறித்து எப்பொழுதும் விழிப்புடன் இருக்கவும். அதற்கேற்ப உங்கள் செயல்பாடுகளை வைத்துக் கொள்ளவும் உறுதி* செய்யவும்.
15 .மோசமான வானிலையில் சவாரி செய்வதைத் தவிர்க்கவும்.
- உங்கள் பைக் ஆவணங்களை சவாரிக்கு வெளியே செல்லும்போது செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம், பதிவுச் சான்றிதழ் (RC), மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் (PUCC) மற்றும் காப்பீட்டுத் தாள்கள் போன்ற அனைத்து பைக் ஆவணங்களையும் எடுத்துச் செல்வது கட்டாயமாகும். 17 மொபைல் உபயோகத்தை தவிர்க்கவும்.
என்றும்
அடியார்கள் நலன் மற்றும் சிவப்பணியில்*
உலகசிவனடியார்கள் திருக்கூட்டம் அறக்கட்டளை* *பதிவு எண். 2/ 2021 தலைமையகம் சென்னை 1 .
Website (இணையதளம் ): https://www.ulagasivanadiyargal.org
Leave a Reply