About Us

மாநில தலைமை ஆலோசகர்கள் :

சிவத்திரு. செ. இராஜேந்திரன் ஐயயா I.A.S.(Rtd)

சிவத்திரு.பொன். மாணிக்கவேல் ஐயயா I.P.S.,(Rtd)

Position Name
மாநில நிர்வாக தலைவர் சிவத்திரு. மு.முத்துப்பாண்டி ஐயா
மாநில சைவ நன்னெறி காப்பாளர் சிவத்திரு. மேட்டூர் சொக்கர் ஐயா
மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மு. சிவ ஈஸ்வரன் ஐயா
சிவத்திரு. பொன்ராஜா ஐயா
மாநில பொருளாளர் சிவத்திரு. பச்சமுத்து ஐயா
மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சிவத்திரு. ஜம்புலிங்கம் ஐயா
சிவத்திரு. மணிகண்டன் ஐயா
சிவத்திரு. சிங்காரவேலன் ஐயா (உழவாரப்பணி செம்மல்.)
சிவத்திரு. ஜெகன் மாணிக்கம் ஐயா
மாநில இணை ஆலோசகர்கள் சிவ.அ.பொ. தங்கதுரை சுவாமிகள்
சிவ. ராஜசேகர் சுவாமிகள்
சிவ. சித்ரா அம்மையார்
நிறுவனர்: மு.அம்மணி அம்மையார்
மாநில திருமுறை இசையரசி: சிவ.உமா நந்தினி பாலகிருஷ்ணன்
மாநில திருவாசக செல்வி: சிவ. யாழினி சுரேஷ்

மாநில ஒருங்கிணைப்பின் நோக்கங்கள்:

உலக சிவனடியார்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் விதமாக இணையதளம் அமைத்து ம் திருத்தொண்டு வளர்ச்சிக்கு அறக்கட்டளை ஆரம்பித்தும், சைவசமய வளர்ச்சி க்கு உறுதுணையாக நிற்போம்.

சிவனடியார் பாதுகாப்பு, சைவ சமய பாதுகாப்பு மற்றும் திருக்கோயில் குடமுழுக்கு, உற்சவ திருவிழா காலங்களில் சிவனடியார்கள் ஆலயத்தின் உள்ளே சென்று எவ்வித அனுமதி & கட்டண அட்டை(Pass) இன்றி வழிபட சட்டரீதியாக வழிவகை செய்வோம்.

வரும்காலங்களில் பொருளாதாரம் மிகவும் குன்றிய நிலையில் உள்ள சிவனடியார்கட்கு வாழ்வாதாரம் உயர்த்த சிறுதொழில்கள் ஏற்படுத்தி அடியார்கள் வாழ்வியல் சிறிதேனும் முன்னேற பாடுபடுவோம்.

கிராமங்களில் குழந்தைகளுக்கு சைவ சமயப்பயிற்சியும், சங்கநாத பயிற்சியும் இளைஞர்களுக்கு சிவகயிலாய வாத்தியப்பயிற்சி யும் அளித்து, கிராம மக்கள் மூலம் கூட்டுவழிபாடு நடத்திடுவோம்.

உழவாரப்பணி செய்யும் அடியார்கள் மற்றும் திருக்கூட்டத்திற்க்கு, பணிசெய்ய உபகரணங்கள் வழங்கிடுவோம்

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும்( விளக்கொளி வீசா கோயில்களில்) தினந்தோறும் ஒருவேளையாவது திருவிளக்கு ஏற்ற ஏற்பாடு செய்வோம்.

சிதலமைடைந்த,வழிபாடற்ற கோயில்கள் சீரமைத்து, உழவாரம் செய்து, பெருமானுக்கு ஒரு வேளை பூசனையாவது நடைபெறும் படி செய்வோம்

திருக்கோயில்களில் திருமுறை ஆடியோ ஒலி ஏற்பாடுசெய்து திருமுறை ஒலிக்க ச்செய்வோம்

திருக்கோயில்களில் நிரந்தர வருமானமின்றி பணிசெய்யும் ஓதுவார்கள்,சிவாச்சாரியார்கள்,மங்கல இசைக்கலைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க முயற்சி மேற்க்கொள்வோம்.

வருடம் தோறும் நடைபெறும், திருமுறை கண்ட மாமன்னன் இராஜராஜசோழனின் ஐப்பசி சதயவிழாவில் அடியார்கள் சார்பில் பெரும்விழா எடுத்து சைவ திருமுறை நன்னெறி மாநாடு நடத்துவோம்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய அடியார்களின், கல்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்குக்கல்வி உதவித்தொகை வழங்குவோம்

ஆலயங்கள் தோறும், சைவ சமயக்கல்வியை ஊக்குவிப்போம். சைவ சித்தாந்த மற்றும் திருமுறை மன்றங்கள் அமைக்க உறுதுணை புரிவோம்.

சிவனடியார்கள் வீடுதோறும் நந்திக்கொடி ஏற்றுவோம்.

அறுபது வயதிற்க்கு மேற்ப்பட்ட சிவனடியார்கள், வருடம் தோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் காசி தலயாத்திரை இலவசமாக அழைத்து செல்வோம்.

அடியார்கள் திருக்கயிலாயம் செல்ல அரசின் மானிய உதவியை பெற்றுத்தருவோம்.

சிவனடியார்களிடம், உறுப்பினர்கள் , மாநில அடையாள , வழங்குவோம்.

தமிழகத்தில் வழி வழியாக அறுபத்துமூன்று நாயன்மார்கள் அவதார அல்லது முக்தி தலத்தின் ஊரில் அந்தந்த நாயன்மார்கள் நினைவுபடுத்தும் விதமாக சிறப்புடன் கூடிய பெயர் பலகையும் திருமடமோ அல்லது நினைவு குடிலோ அமைக்க முயற்சி செய்வோம்.

குறிப்பிட்ட சில மாவட்டங்களில் கோசாலை பசுமடம் அமைத்து, அதில் பசும்பால் நித்தியமாக சுவாமி, அம்பாள் அபிசேகத்திற்க்கும் மேலும் பசுஞ்சாணம் மூலம் தூயதிருநீறு தயாரித்து திருக்கோயில்கள் மற்றும் சிவனடியார்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்குவோம்.

சைவசமயத்திற்கென தம்வாழ்வையே, அர்ப்பணித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் அடியார் பெருமக்களை அடையாளம் கண்டு, அவர்களது சிவத் தொண்டிற்க்கு, உறுதுணையாக இருப்பதோடு, அவர்களையும் சிறந்த முறையில் கவுரவித்து ஊக்கப்படுத்துவோம்.

வருங்காலத்தில், எதிர்கால திட்டமாக சைவசமயத்தை போற்றும் விதமாக சைவ மாதஇதழ் வெளியீடு மற்றும் சைவநெறியின் மாண்பை உலகம் முழுதும் பறைசாற்றும் விதமாக சைவர்கள் என தொலைக்காட்சி சேனல் தொடங்குவோம்.

உலகம் முழுதும் உள்ள சிவனடியார்கள், நம் ஒற்றுமை அடையாளம் மற்றும் வலிமை படுத்தும் விதமாக தமிழகத்தில் உலக சிவனடியார்கள் மாநாடு நடத்துவோம்.

எல்லா மாவட்டங்களிலும் இயற்கை வைத்தியம் , சித்த வைத்தியம் முகாம் அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் உடன் இணைந்து முகாம் நடத்தி அடியார்கள் நலம் காப்போம்*

மேற்க்கண்ட நோக்கங்களை உலகம் முழுதும் உள்ள சிவனடியார்களின் இணைந்த கரங்கள் கொண்டு அடைய இணைவோம். இணைந்து திருத்தொண்டு புரிவோம்.

எட்டுத்திக்கும் சைவப்பணி சிறக்கட்டும்.

உலகில் உள்ள சிவனடியார்கள் மற்றும் அனைத்து திருக்கூட்டங்களுக்கும் சைவப்பணி செய்வோர் யாராக இருந்தாலும் சிரம்தாழ்த்தி வரவேற்போம். எந்தவொரு அடியார்களுக்கும் திருக்கூட்டத்திற்கும் மாற்றாகவோ எதிராகவோ நம் திருக்கூட்டம் உருவாகவில்லை. எம் கடன் பணி செய்து கிடப்பதே என்று அனைவரையும் ஒன்றிணைத்து அரவணைத்தே செல்வோம்.

உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் .

Donate Us

Ulaga Sivanadiyargal Thirukootam Arakattalai
Canara bank
Account: 992120 1006697
IFSC :CNRB0016110
Branch : KEEL KATTALAI
Chennai 600 117